Bodhidharma
Home   About Us   Programs & Activities   Buddha   Great Monks   Meditation   Contact Us
Buddha
 
Other links
~~~~~~~~~~~~~~~~~~~~~~
தியானம் அவசியமா?
தியானத்தில் ஈடுபடும் வழிமுறைகள்
தியான வழிமுறைகள்
சமதா தியானம்
விபசனா தியானம்
 
Meditation Centers
 
Vipassana Meditation Centre,
'Dhamma Setu',
533 Pazhanthandalam Road,
Thirumudivakkam,
(Via Thiruneermalai),
Chennai - 600 044. INDIA.

Telephone:
+91-44-24780952,
+91-44-24780953,
+91-44-64504142
Mobile:
+91-9444021622 (Mr. Vinayak)
E-mail: info@setu.dhamma.org
Web:http://www.setu.dhamma.org

 
 
 
 
Importance of Meditation
 

தியானம் அவசியமா?

ஆம் தியானம் அவசியமே!

உலகில் மக்கள் அடிக்கடி துக்கத்தில் ஆழ்வதை அறிகின்றனர். அதற்காக எதையோ தேடி அலைகின்றனர். ஏன் இப்படி அலைகிறோம் என்பதையே அறியாமல் இருப்போர் பலர். வெளிச்சம் மறைந்ததும் இருள் தானாகவே வெளிவரும். அதாவது இருள் எப்போதும் இருக்கிறது. வெளிச்சம் வந்ததும் மறைகிறது. வெளிச்சம் மறைந்ததும் அவ்விடத்தில்  இருள் தானாகவே வருவதைக் காண்கிறோம். இது இயற்கை. இது போலவே மகிழ்ச்சி வரும்போது துயரம் மறைகிறது. இந்த சொற்பகால மகிழ்வு மறைந்ததும் அங்கிருக்கும் துக்கம் (துயரம்) வந்தடைகின்றது. இந்த மகிழ்ச்சி தற்காலிகமானதே என்பதை அறியுடையோர் அறிந்திருப்பதால் அக மகிழ்வதில்லை, என்றைக்கும் துக்கம் நிலையாய் இருப்பதை அறிந்திருப்பதால் இத் துக்கத்தை (துயரத்தை) நீக்கும் வழியைக் காண அலைகின்றனர். ஆக மக்கள் தேடி அலைவது துக்கத்திலிருந்து (துயரத்திலிருந்து) விடுபடும் வழியைக் காணதான். இதற்குதான் தியானம் அவசியம் தேவைப்படுகிறது.

அரச குமரர் சித்தார்த்தர் துக்கத்தை போக்கும் வழியை காணவே துறவறம் பூண்டு பலவித துன்பங்களை ஏற்று காடு, மலை, வனம் ஆகிய இடங்களில் தான் கேள்வியுற்ற கடும் தவம் முதலிய வழிகளில்ஆறு வருடங்கள் ஈடுபட்டார். கடைசியாக தன் முயற்சினாலேயே ஞானம் பெற்று சம்மா சம்புத்தர் ஆனார். அவர் தன் ஞானத்தினால் அறிந்த உண்மைகளை உலக மக்கட்கு முதலில் அறிவித்தது நான்கு உன்னத உண்மைகள். அவை--

(1)
உலகில் துக்கம் நிறைந்துள்ளது என்ற உண்மை
(2) துக்கம் உற்பத்தியாகும் காரணம் உண்டு என்ற உண்மை
(3) துக்கத்தை அடியோடு போக்குதல் என்ற உண்மை
(4) துக்கத்தை போக்கும் வழி என்ற உண்மை.

துக்கம் இருப்பதை மாத்திரம் தெரிவித்து விட்டு அத்துடன் நின்றிருப்பரனால் அவரை துயரவாதி என்றழைப்பர். ஆனால் புத்தரோ துக்கம் இருப்பதை அறியும்படி தெரிவித்துவிட்டு , அத்துக்கத்தை எப்படி புகுவது? அதாவது துயரத்திலிருந்து எவ்வழியால் விடுபட்டு நிரந்தர மகிழ்வைக் காணலாம் என்னும் வழியையும் காண்பித்திருக்கிறார்.

இப்படிப்பட்ட உண்மை ஞானத்தை அதாவது “புத்த நிலையை” அரச குமாரனாகிய சித்தார்தார் அடைந்ததால் “புத்தர்” என அழைக்கப்படுகிறார்.

புத்தர் ஆகக்கூடிய உன்னத ஞானம் பெறக் காரணமான அந்த “தன் முயற்சி” எது? அதுதான் அவர் கண்டு பிடித்த விபசனா தியானம் (Insight Meditation). ஆம் அவர் புத்த நிலை அடைவதற்குக் காரணம் “தியானம்” தான்.

தியானம் உலக மக்களால் இப்போது அதிகமாக போற்றப்படுகிறது. பலதரப்பட்ட மக்கள் ஜாதி, மதம், நிறம், தேசம், மொழி, அந்தஸ்து ஆகியவைகளின் வேறுபாடின்றி விரும்பி தியானத்தில் பயிற்சி பெற முயல்கின்றனர்.

தியானம் என்பது இங்கும் அங்கும் கட்டுக்கடங்காமல் அலையும் மனதைக் கட்டுபடுத்துவதே. அதவாது நாம் செய்யும் எல்லாவித (நல்லவை, தீயவை) காரியங்களும் நடைமுறையாவதற்குத் தூண்டுகோலாக இருப்பது மனமே. அப்படிப்பட்ட மனதை தூய்மைபடுத்தி ஒருநிலையில் ஆழ்த்தி (Samadhi), கட்டுக்குள் அடக்குவது தான் தியானம்.

எல்லாவிதமான துயரம், மகிழ்வுக்குக் காரணமாகிய மனத்துள் இயற்கை(நிலை) குணத்தை அறிந்து, அதை தன் தின வாழ்கையில் நல்ல விதமாய் ஈடுபட செய்வதுதான் தியானம். இவ்வித தியானத்தின் ஜாதி, மதம், நிறம், மொழி, தேசம் வேறுபாடு தேவையா? தேவையில்லை என்பதை அறிந்துதான் எவ்வித வேறுபடும் இல்லாமல் உலகில் எல்லா மக்களும் ஒன்று சேர்ந்து தியானத்தில் ஈடுபட்டு, அவரவர் திறமைக்கேற்ப நற்பலன்களை அடைகின்றனர்.
பகவன் புத்தர் காட்டிய நெறிப்படி எவ்விதத்திலும் மாறுபடாமல் தீவிரமாய் தியானத்தில் ஈடுபடுவோர் சமாதி நிலையடைந்து நல்ல முடிவாகிய (பஞ்ஞா) விவேகத்தை (Wisdom) அடையமுடியும். அரஹந்து நிலையையும் அடைவர்.

முடிவான நிலையாகிய அரஹந்து நிலையைப் பெற முடியாதோர், கீழ்கண்ட நற்பலன்களையாவது பெற வாய்ப்புள்ளது. மிக்க கவலையையுடையோர், கவலையைக் குறைத்துக் கொள்வர்.

எதற்கெடுத்தாலும் கோபத்துடன் இருப்போர், கோபம் தணிந்து ஓய்வுடன் இருப்பர்.

வாழ்க்கையில் மனந்தளர்ந்து வேதனையுடனிருப்போர், மனந்தளர்ந்திருப்பின் காரணத்தை அறிந்து மகிழ்வுடன் காணப்படுவர்.

மாணவர்கள், வழக்கறிஞர்கள், டாக்டர்கள் ஆகியோர் அவர்கட்கு மிக்க அத்தியவசியமாய் தேவையான ஞாபக சக்தியை மிக அதிகமாய்ப் பெறுவர்.

தனவந்தர்கள் தங்களின் தனத்தின் (தன்மை) நிலையை நன்றாய் அறிந்து நன்மை பயக்கும் வழியில் தனத்தைச் செலவிட்டு நற்பயனைப் பெறுவர்.

பொருள் இல்லாத ஏழைகள் தன் வாழ்க்கையில் திருப்தி அடைவதுடன் பொருள் பெற்றிருப்போர் மீது பொறாமை ஏதும் இல்லாமல் நண்பர்களாவே வாழ வழி ஏற்படும்.

வாழ்வில் வெறுப்படைந்தோர், இவ்வெருப்பு எதனால் ஏற்படுகிறது என்பதை அறிந்து நற்பாதையைக் கடைப்பிடித்து நலமுடன் வாழ்வர்.

கோபம், பொறாமை, பகையுணர்ச்சி ஆகியவையுடையோர், இவைகளுக்கான காரணங்கள் யாவை, ஏன் இவ்வித உணர்ச்சிகள், இவைகளினால் ஏற்படும் அபாயங்கள் ஆகியவைகளை நன்றாய், தெளிவாய் புரிந்து திருந்தி நல்வாழ்க்கைப் பெறுவர்.

உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு வாழ்வில் சீர்குலைந்து தீய பழக்கங்களில் ஈடுபட்டுளோர், உணர்ச்சிகளை அடக்கும் வழிகளை அறிந்து புலன் உணர்ச்சிகளை அடக்கி நல்வாழ்வில் ஈடுபடுவர்.

முடிவில்லாத பிரச்சினைப் பெற்றிருப்பவராயின், இப்பிரச்சினைகள் ஏற்படும் காரணங்களை உணர்வதுடன் இவ்வித பிரச்சினைகளில் இருந்து வெற்றி பெறத்தக்க தைரியத்தையும், மன பலத்தையும் பெற்று எல்லாவித பிரச்சினைகளிலிருந்தும் விடுபட்டு நல்வாழ்வைப் பெறுவர்.

வாழ்வில் அதிருப்தியடைந்தோர், இதற்கான  காரணத்தை அறிந்து, அதிருப்தியை ஒழித்து திருப்தியுடன் வாழ வழி செய்து கொள்வர்.

இரத்த அழுத்தம்(Blood Pressure), நீரிழிவு(Diabetic), ஈளை (Asthma) ஆகிய வியாதிகள் நீங்கி சுகமுடன் வாழ வழி ஏற்படும்.

அறியாமையில் இருப்போர், இதற்கான காரணத்தைப் புரிந்து கொள்வதுடன் மனதைப் பண்படுத்தி அறிவை விருத்தி செய்யும் வழியைத் தெரிந்து நல்லறிவுடன் இன்பமும் தம் குடும்பத்தாருடன் வாழ்வர்.

இவைகள் தியான பயிற்சிகளில் இருப்போர் அடையும் பயன்களில் ஒரு சிலவே. இன்னும் இவ்வித தியான பயிற்சியினால் சொல்லொணா நன்மைகள் அடைய வாய்ப்புண்டு. இவ்வித நற்பலன்கள் கடைகளிலோ, கிடந்குகளிளோ கிடைக்காது. அதே வேளையில் வெளியில் எங்கிருந்தும் வாங்கவும் இயலாது என்பதைப் புரிந்து கொள்வதுடன், இப்பலன்கள் எல்லாம் தியானிகள் தாங்களாகவே தங்களிடமிருந்தே தியான பயிற்சியினால் பெறுவர். இவ்வித நற்பலன்கள் கிடைக்க வாய்ப்பிருக்கும் போது அவைகளை அடைய இச்சந்தர்ப்பத்தை ஏன் கைவிட வேண்டும்? இதை அறிந்து புரிந்து தியான பயிற்சியை நல்லதோர் தியான ஆசிரியரிடம் கற்று, அதில் மிக அதிகமாய்(ஆழ்ந்து) ஈடுபட்டு வாழ்வில் சிறப்புற்று வாழ வகை செய்து கொள்வதே சிறந்த வழியாகும்.

மொத்தத்தில் தியானம் அவசியமே!

 
Last Words

The Buddha tirelessly traveled and taught until his death at age 80. His last words to his followers:

"Behold, O monks, this is my last advice to you. All component things in the world are changeable. They are not lasting. Work hard to gain your own salvation."

 
E-mail:
meetdhamma@gmail.com
©Copyright 2012, All Rights Reserved, Kanchipuram, Tamilnadu, South India, India, www.bodhidharma.co.in
 
webdesign in chennai